Pages

Showing posts with label நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி. Show all posts
Showing posts with label நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி. Show all posts

Wednesday, November 7, 2018

நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி

நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி
இறைவழிபாட்டில் ஒருவகை இயற்கை வழிபாடு. அன்பின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் இந்த வழிபாடு ஏற்பட்டது. இயற்கை வழிபாட்டிலும் பல வகையுள்ளது. அதில் ஒரு பிரிவு தான் விலங்கு வழிபாடு. நடப்பவை, ஊர்பவை, பறப்பவை என்ற இனங்களில் சிலவற்றை மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். பசுவை கோமாதாவாக
வழிபடுகின்றனர். பாம்பை தெய்வ அம்சமாக கருதி வழிபடுகின்றனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவெனின் பசுவை மனிதனின் அன்பால் வழிபட்டான். பாம்பை அச்சத்தால்  வணங்கினான். பாம்பு மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாம்பைக் கொல்வது பாவம் என்ற கருத்து இன்றும் நிலவுகின்றது. பாம்பு புற்றை அகற்றுவது பாவம் என்று இன்றும் முன்னோhர்கள் கூறி வருகின்றனர். பாம்புகளில் நல்லது என அழைக்கப்படுவது நல்ல பாம்பு மட்டும் தான்.
மனிதன் தொடக்கத்தில் காடுகளிலும் மலைக் குகைகளிலுமே திரிந்தான், வாழ்ந்தான் அப்போது அவனை அச்சுறுத்தியதியவை கொடிய விலங்குகள் அவற்றில் பாம்பும் ஒன்றாகும். அவற்றிலும் பாம்பு அவன்; அருகிலிருந்து அடிக்கடி அச்சுறுத்திய ஒன்றாகும். நீரிலும் அது, நிலத்திலும் அது காட்டிலும் அது மேட்டிலும் அது எங்கும் எதிலும் இருந்த பாம்பே மனிதனது ஆதி வழிபாட்டு கடவுளாக உருக் கொண்டிருத்தல் வேண்டும்.

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...