Pages

Wednesday, September 5, 2018

பிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்

.
குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள் குழந்தைச் செல்வமும் ஒன்று என அனைவராலும் நம்பப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு வளனும் நலனும் வேண்டிச் செய்யப்படும் சடங்குகள்"பிறப்புச் சடங்குகள்" எனப்படும் வள்ளுவர் குழந்தைச் செல்வத்தின் சிறப்பை எடுத்துக் காட்டும் போது
“ குழாலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொற் கேளாதவர்” (குறள்.66)
' படைப்புப் பல படைத்து " எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலடிகளும் குழந்தைப் பேற்றின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது.

சடங்கு ஓர் அறிமுகம்

மனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைகோலங்களின் தொகுப்பே சடங்கு. நம்பிக்கைகள் கருத்து வடிவம் கொண்டவை சடங்குகள் செயல் வடிவம் கொண்டவை நம்பிக்கைகள் செயல் வடிவம் பெறுகையில் சடங்கு வடிவத்தை அடைகின்றது என்கிறார் தே.ஞானசேகரன்.


உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...