உலக நாடுகளில் பாம்பு வழிபாடு
பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்றிய இடங்கள் அனைத்திலும் சிறுகவோ, பெருகவோ பாம்பு வணக்கம் தோன்றி இருக்கின்றது. உலகில் நாகம் பற்றிக் குறிப்பிடாத மதமோ கலாசாரமோ கிடையாது. ஆபிரிக்கா, மெக்சிக்கோ, சீனா, அவுஸ்ரேலியா, ஐப்பான்,
ப்பிலோனியா, எகிப்து, அரேபிய, கிரேக்கம், உரோமம்;, இந்தியா, இலங்கை என் பல நாடுகளிலும் பாம்பு வழிபாடு சிறப்பிடம் பெற்றுக்காணப்படுகின்றது.
நாகவழிபாடு இருந்த இடங்களை பற்றி ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாரச்சிகளின் போது எகிப்தில் கிடைத்த தகவல்கள் அந்த நாட்டு மக்கள் பாம்பைத் தமது அரச சின்னமாகக் கொண்டிருந்தனர். அரசர்களும் அரசிகளும் அணிந்திருந்த முடிகள் நாக பாம்பின் படத்தில் வடிவத்தில் இருந்தன. பண்டை எகிப்திற் பாம்பு பூமியின் புத்திரனாகவும் பூமியின் உயிராகவும் கருதப்பட்டது. எகிப்துக் கடவுளான ஒசிரிசு தலையிலும் அவரது மனைவியான ஈசிசு தலையிலும் பாம்பு படமெடுத்த நிலையில் காட்சி தருகின்றது. இவர்கள் இறந்த அரசனின் ஆவியாக பாம்பை வழிபட்டனர். கோரசு என்ற கடவுளின் படத்தில் இரண்டு முதலைகளின் மேல் நிற்பதும் ஒவ்வொரு கையிலும் இரண்டிரண்டு பாம்புகளையும் தேள் ஒன்றையும் வைத்திருப்பது போலக் காட்டப்பட்டுள்ளார்.
பாபிலோனியாவில் கோவோ என்ற தெய்வம் பாம்பின் உருவிலே வணங்கப்பட்டது. பாபிலோனியர் மண்ணின் வளமையைப் பாம்பாக உருவகப்படுத்தி வழிபட்டனர். அங்குள்ள மந்திரவாதிகள் பறக்கும் பாம்புருவத்தைப் பயன்படுத்தினர். மெசபட்டோமியாவில் நாக வழிபாடு சிறப்புடன் திகழ்ந்தது என்ற உண்மையை அங்கு நடத்திய ஆய்வுகள் நமக்குக் கூறுகின்றன. கல்லிலும் சுட்ட செங்கல்களிலும் பானைகளிலும் பாம்புருவங்கள் தீட்டப்பட்டிருந்தன.
கிரேக்க நாட்டு மக்கள் பாம்பைக் காவல் தெய்வமாகக் கருதினர். உயிருள்ள பாம்புகளை அவர்கள் வழிபட்டு வந்தனர். போரில் மரணமெய்திய வீரர்கள் பாம்புகளாகத் தோன்றுவர் என்பது அவர்கள் நம்பிக்கை. அவர்கள் வணங்கிய சில தெய்வங்கள் பாம்பின் உருவிலே காணப்பட்டன. உயிருள்ள பாம்புகளை அவர்கள் கோயில்களில் வைத்துப் பாதுகாத்து அவற்றுக்கு ரொட்டியும் தேனும் வழங்கி நேர்த்திக்கடன் முடிப்பார்கள். கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸை ஒரு நாகம் பாதுகாத்து வந்ததாகக் கி.மு 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏரோட்டஸ் என்ற பயண ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஏதென்ஸ் நகரின் தேசியச் சின்னம் பாம்பாகும். கிரேக்க நாட்டை அடுத்துள்ள கிரேல் என்ற தீவில் வாழ்ந்த மக்கள் பாம்பைப் பெண் தெய்வமாக ழூவழிபட்டனர். இப் பெண் தெய்வத்தின் சிலைகளில் இவர்களின் உடல், தலை என்பனவற்றை நாகம் அலங்கரிப்பது ஒரு சிறப்பம்சமாகும். மரத்தை வெட்டும்போது பாம்பு ஏதேனும் இறந்துவிடுமானால் அவ் விடத்தை விட்டுகடவுளும் அகன்றுவிடுவார் என்ற நம்பிக்கை ரோம் நாட்டு மக்களிடம் இருந்தது.
அமெரிக்க நாட்டு மாயா நாகரிகத்தின் கலைச்சின்னங்களில் பாம்புருவங்கள் இடம் பெற்றிருந்தன, இறக்கையோடு கூடிய பாம்பின் உருவை அவர்கள் வழிபட்டனர். பாம்பிற்குப் பல கோயில்கள் அங்கே இருந்தன. மெக்சிகோவில் கிடைத்த பானைகளில் பாம்புருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஆப்பிரிக்க நாடுகளில் உயிருள்ள மலைப்பாம்பை இன்றும் வணங்குகின்றார்கள். மலைப் பாம்பு தெய்வீகத்தன்மை கொண்டது என்றும் அறிவுக் கடவுள் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள். ஆதியில் ஆணும் பெணும் குருடாகவெ பிறந்தனர் என்றும் அவர்களுக்கு மலைப்பாம்பு கண்களைக் கொடுத்தது என்றும் அவர்கள் நம்புகின்றனர். லும்வா என்ற ஆப்பிரிக்க இனத்தவர் பாம்பைப் புனிதமாகக் கருதுவர். மேலும் பாம்பு கடித்து ஒருவன் இறந்தால் அது அவனுக்கு நற்பெறு என்றும் நம்புகின்றனர். ஆபிரிக்க நாட்டின் சில பகுதிகளில் பெண்டிர் பலர் பாம்பின் அடிமைகளாகத் தங்களை அறிவித்துக் கொண்டு பாம்புக் கோயிலில் கடைசிவரை தங்கள் வாழ் நாட்களைக் கழிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
இடிக்கு அரசன் பாம்பு என்பது ஐப்பானிய மக்களின் நம்பிக்கை. அங்கு வணங்கப்படும் கசானோ என்ற தெய்வம் பாம்போடு தொடர்பு கொண்டது. நாகசாகியில் காணப்படும் வெள்ளைக் கடற்பாம்பு கடவுளின் அவதாரமாகக் கருதப்பட்டது. கம்போ.டியாவில் பாம்புக்கு ஒரு கோவில் உள்ளது. அக்கோவிலின் கூரை முழுவதும் ஏழுதலைப் பாம்பின் உருவங்கள் நூற்றுக் கணக்கில் வரையப்பட்டுள்ளன. கொரியாவில் நாககன்னிகை எழுவரை வணங்கும் வழக்கம் இன்றும் உள்ளது. பினாங்கில் புத்தர் கோயிலை அடுத்துப்பாம்பிற்கு ஒரு கோயில் உள்ளது. அங்கு உயிருள்ள பாம்புகளை இன்றும் வணங்குகின்றனர்.
பொனீசியா வாயில் தன் வாலை விழுங்குவது போல உள்ள பாம்பை தம் சொர்க்க உலகத் தெய்வமான தாத் என்பதற்குரிய சின்னமாகக் கருதினர். திரியன் நாணயங்களில் பாம்பு வழிபாட்டு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இலாம் நாட்டு மக்களிடம் பல பாம்பு நம்பிக்கைகள் இருந்தன என்பதை இங்கு கிடைக்கும் தொல்சான்றுகள் பாம்புமனிதனையும், நினைவுத் தூண்களில் பாம்பு உருவம் சஙபொறிக்கப்பட்டிருத்தலையும் , பாம்புருவப் பெருந்தெய்வத்தையும், பாம்பிற்க்கு மனிதன் தீனியிடுதலையும் இருதலைப்பாம்புகளையும், கொம்புமுளைத்த பாம்புகளையும், இறக்கை முளைத்த பாம்புகளையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. பாம்புப் பெண் தெய்வத்தின் ஒவ்வொரு கையும் பாம்பால் சுற்றப்பட்டிருப்பது போலவும் அத்தெய்வத்தின் கழுத்தில் பாம்பு சுற்றிக்கொண்டிருப்பது போலவும் உருவங்கள் இங்கு கிடைத்துள்ளன.

No comments:
Post a Comment