Pages

Wednesday, September 5, 2018

சடங்கு ஓர் அறிமுகம்

மனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைகோலங்களின் தொகுப்பே சடங்கு. நம்பிக்கைகள் கருத்து வடிவம் கொண்டவை சடங்குகள் செயல் வடிவம் கொண்டவை நம்பிக்கைகள் செயல் வடிவம் பெறுகையில் சடங்கு வடிவத்தை அடைகின்றது என்கிறார் தே.ஞானசேகரன்.



க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி சடங்கு என்பதற்கு 1. சாஸ்திரம் விதிப்பதால் அல்லது வழக்கம் காரணமாக பிறப்புஇ இறப்புஇ திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் புனிதச் செயல் என்னும் 2. மாறுதலே இல்லாமல் எதற்காகச் செய்கிறோம் என்னும் சிந்தனையே அல்லாமல் இயந்திர கதியில் இயங்கும் செயல் எனவும் விளக்கம் தருகிறது.

சடங்கு என்பதற்கு நர்மதாவின் தமிழ் அகராதி கிரியை மல்யுத்தத்தில் உள்ள ஒரு பிடிவகை சாஸ்திரப்படி அல்லது வழக்கம் காரணமாக மேற்கொள்ளும் புனிதச்செயல் இயந்திர கதியில் இயங்கிடும் செயல் என விளக்கம் கூறுகிறது.

சடங்கு என்பதற்கு வைதிகக்கிரியை  மற்பிடிவகை என்று கோனார் தமிழ் அகராதியும் செய்முறை என்று பாவானந்தர் தமிழ்ச் சொல்லகராதியும் 

சடங்கு என்ற சொல்லானது “சட்ட" என்ற உரிச் சொல்லில் இருந்து வந்தது.

சட்ட +அம் +கு - சடங்கு 

சட்ட என்ற சொல்லானது செவ்விதமான ஒழுங்குமுறையான நேர்த்தியான என்ற பொருள்

அம் என்ற சொல்லானது அழகியது என்ற பொருள்

கு என்ற சொல் தன்மையைக் குறிக்கும் விகுதி

ஆகவே சடங்கு என்பது வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளாக செவ்விதமாக ஓர் ஒழுங்கு முறையாக அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என பொருள்படும்.

இன்னொரு வகையில் பார்த்தோமாயின் சடங்குகள் என்பது வாழ்வு முறைக்கு அரண்செய்வது பாதுகாப்பு அளிப்பது அதனை அடிப்படையாக கொண்டே அரண் என்பது மருவி அரணம் எனவும்  அரணம் என்பது மருவி கரணம் எனவும் மாற்றப்பெற்று சடங்குகளை கரணம் எனவும் அழைக்க தொடங்கினர். தொல்காப்பியத்தில் சடங்கு என்ற பொருளில் கரணம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

இற்றைக்கு நாட்டுப்புற மக்களிடம் வழக்கிலுள்ள சடங்குகளைப் பயன்பாட்டின் அடிப்படையிலும் செயன்முறைகளின் அடிப்படையிலும் பல வகைப்படுத்தலாம். அறிஞர்கள் பலரும் பலவாறாக பிரித்துள்ளனர். சடங்குகளை ஒரு சாரர் நான்கு வகைப்படுத்தினர்.

சடங்கு

வாழ்க்கை வட்ட சடங்குகள் 

வளமைச் சடங்குகள் 

மந்திர சடங்குகள்

வழிபாட்டுச் சடங்குகள்


பொதுவாக சடங்கு என்றது இரு வகையாகN;வ இன்றைய சமூகத்தினால் நோக்கப்படுகின்றது.

மங்களச் சடங்குகள்

அமங்கலச் சடங்குகள்

மங்கலச் சடங்குகள்

சேனை தொட்டு வைத்தல்

தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல்

மகவுக்கு உணவு ஊட்டல்

வாழ் நாள் வேள்வி

காதாணி விழா

எழுத்தறிவித்தல்

சிவதீட்சை

உபனயனம்

சாமத்திய வீடு

திருமண உறுதி

பொன்னுருக்கல்

திருமணம் 

வளகாப்பு

புதுமை புகுவிழா

ஆலய சடங்குகள்

அமங்கல சடங்குகள்

உயிர் புறப்பாடு

சடல நீராட்டு

திருவடிப்பேறு

கல் நிறுவல்

அந்தியேட்டி

ஆண்டுத்திதி

இலக்கியங்களில் சடங்குமுறைகள்.

“சடங்கு” என்னும் சொற்பிரயோகத்தைச் சங்க இலக்கியப் பாடல்களில் காணமுடியவில்லை ஆனால் மழை இ வளமை இ வேட்டை ஆகியவற்றை முன்னிறுத்தி பண்டைக்கால மக்கள் சடங்குகளை நிகழ்த்தியுள்ளனர். வேட்டை இ விவசாயம் ஆகிய இரண்டிற்கும் மழை மிகவும் அவசியமாகும். மழை வேண்டிச் செய்யப்பட்ட சடங்குகள் மந்திரச் சடங்காகவும்இ மந்திரமும் சமயமும் கலந்த சடங்காகவும் விளங்கிய குறிப்புக்களை இலக்கியங்களில் காணமுடிகிறது. இச்சடங்கு முறைகள் நிலத்திற்கு நிலம் மாறுபட்டு அமைந்துள்ளதைச் சங்க இலக்கியங்கள் சுட்டும்.

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். அந்நிலத்தில் வாழ்ந்த குறவர்கள் எழுப்பும் ஒலியினால் மழை வந்ததாகவும் அது நிலத்திலே பெய்ததாகவும் அந்நிலத்து மக்கள் நம்பினர். அவர்கள்; அதற்காக சடங்குகள் செய்ததை

குன்ற குறவன் ஆர்ப்பின் எழிலி

நுன்பல் அழிதுளி பொலியு  நாட

மலைவான் கொள்க என் உயிர் பலிதூஉய்

மாரியான்று மலை மேக்உயர்க எனக்

கடவுட் பேணிய குறவர் மாக்கள்

பெயல்கள் மாறி உவகையர்

என்ற பகுதிகள் முறையே விளக்கும். மக்கள் பேணிய கடவுளை தற்காலத்தி கடவுளருடன் ஒப்பிடமுடியாது. அது ஆவி நம்பிக்கையில் அமைந்ததாகும் அம்மக்கள் இயற்கை பொருட்களையும் நிகழ்ச்சிகளையும் ஆற்றலும் உயிரும் உடையவனாகக் கருதியதே இதற்குக் காரணமாகும். புறநானூறு கூறும் 'உயிர்பலி தூவுதல்" நீர் வளாவுதலாக இருந்தது. நீர் சிந்துதல் நீராவி மந்திரவாதியை முழுக்காட்னடுதல் ஆகிய மந்திரச் செயல்கள் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மழைச் சடங்குகளில் காணப்படுகிறது. 

மருத நில மக்கள் மழைக்காகச் செய்யும் சடங்கைப் பரிபாடல் விளக்குகிறது. சங்குஇ நண்டுஇ இறவுஇ வாளை போன்றவற்றை வையையில் இட்டுச் சடங்குகள் செய்துள்ளனர். அதனை சங்கை நதியிலிடுதல்இ தொத்து மந்திரமாக மழை வேண்டிச் செய்யப்பட்டது. தொடர்பு கொண்டிருந்த இருபொருள்களிடையே நிரந்தரத் தொடர்பு இருக்கும் என்பது தொத்து மந்திரமாகும். நீரோடு நெடுநாள் தொடர்பு கொண்டிருந்த சங்குஇ சிப்பி போன்ற பொருட்களுக்கு நீரை வரவழைக்கும் இயல்பு உண்டு என்ற நம்பிக்கையை இங்கு காணலாம். இவற்றை ஆற்றில் இட்டால் ஆற்றில் நீர் பெருகும் ஆற்றில் நீரைப்பெருக்க மழைபெய்யும் என நம்பினர் என்ற கருத்து உண்டு.

கொற்கையில் மழைச்சடங்கு செய்யப்பட்டதை அகநானூற்றுப் பாடல் குறிக்கின்றது. பழையர் மகளிர் பௌர்;மணியன்று தழையாட உடுத்திப் படித்துறையை வழிபட்டுள்ளனர்.அவ்வழிபாட்டில் முத்தும் வலம்புரியும் இடம்பெற்றுள்ள்னர். முல்லை நிலத்தில் ஏறுதழுவுமுன் ஆயர்கள் நீரோடு தொடர்புடைய பொருள்கள் மழையைக் கொண்டுவரப் பயன்படும் என்னும் நம்பிக்கையில் இச்செயல் அமைந்தது எனலாம்.

கானவர் தங்களது வழிபடு தெய்வத்தினைச் சுற்றமோடு சென்று சடங்கு நிகழ்த்தி வழிபட்டதனை

“அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது

பணைத்த பகிழிப் போக்கு நினைத்து கானவன்

அணங்கொடு நின்றது மலைவான் கொள்க எனக்

கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டெழுந்து

கிளையோடு மகிழுங் குன்ற நாடன்.”;

என்ற அடிகள் விளக்கும் கானவன் காட்டுப்பசுவின் மீது அம்பு  எய்தான். அம்பு குறி தவறிவிட்டது உணவாக வேண்டிய உணவு தப்பிவிட்டது. அதற்கு மலைத்தெய்வத்தின் கோபம் தான் காரணம் என் நம்பினான் மழை பெய்தால் அம் மலைத்தெய்வத்தின் சினம் தணியும் என நினைத்தான் . உடனே மலைமேல் ஏறிச்சென்று கடவுளை பேணி மகிழ்ந்தான். மக்கள் தாம் மேற்கொண்ட முயற்ச்சியில் வெற்றி பெற்ற பின்னர் அத்தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக பலியிட்டு பகுத்துண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதனையே "உண்டாட்டு" என்பர்.

பகை விரட்டிஇ பசு கவர்ந்து மறவரின் செயலை அகநானூரு குறிப்பிடுகிறது. மறவர் பகை நிலம் சென்று வலிய வாளால் வெட்டியும்இ வில்லால் எய்தும் பகைவரை விரட்டி அவர்களுடைய பசுக்களைக் கவர்ந்து வந்தனர். அஞ்சா நெஞ்சினராகிய அவ் வீரர் அம்பைத்தூரத்தே வைத்தனர். தெய்வம் உறைகின்ற பருத்த வேப்பமரத்தின் கீழ் நிணத்தை (குருதியும் சோறும் கலந்தது) எறிந்துஇ குருதி தூவிஇ பலியிட்டு புலாலாகிய பலவைப்பட்ட இறைச்சியினை வேகவைத்து உண்;டனர். மறவர் தமக்குக் கிடைத்த கொள்ளைக்கு நன்றி செலுத்தும் வகையில் வேப்பமரத்தை வழிபட்டனர். அம் மரத்தில் தெய்வம் உள்ளது என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம் ஆகும். இன்று சிறுதெய்வ வழிபாட்டிலும் மாரியம்மன் வழிபாட்டிலும் வேப்பமரம் முக்கியம் இடம்பெறுவதை அறியமுடிகிறது.

 நிலத்தில் விதை விதைக்கும் போதும் சடங்குகள் செய்தே தொடங்கியுள்ளனர். திருமுகாற்றுப்படை விவரிக்கும் வேலன் வெறியாடல் விதைப்புக்கு முந்திய சடங்காகவே தோன்றுகிறது. பலியிட்ட மறியின் குருதியில் விதையைத் தேய்த்து விதைத்தனர். இரத்தம் உயிர்ச் சக்தியின் அறிகுறி இரத்தத்தில் விதை நனைக்கப்பட்டால்  வளம் பெருக்கும் என மக்கள் நம்பினர்.

No comments:

Post a Comment

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...