நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி
இறைவழிபாட்டில் ஒருவகை இயற்கை வழிபாடு. அன்பின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் இந்த வழிபாடு ஏற்பட்டது. இயற்கை வழிபாட்டிலும் பல வகையுள்ளது. அதில் ஒரு பிரிவு தான் விலங்கு வழிபாடு. நடப்பவை, ஊர்பவை, பறப்பவை என்ற இனங்களில் சிலவற்றை மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். பசுவை கோமாதாவாக
வழிபடுகின்றனர். பாம்பை தெய்வ அம்சமாக கருதி வழிபடுகின்றனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவெனின் பசுவை மனிதனின் அன்பால் வழிபட்டான். பாம்பை அச்சத்தால் வணங்கினான். பாம்பு மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாம்பைக் கொல்வது பாவம் என்ற கருத்து இன்றும் நிலவுகின்றது. பாம்பு புற்றை அகற்றுவது பாவம் என்று இன்றும் முன்னோhர்கள் கூறி வருகின்றனர். பாம்புகளில் நல்லது என அழைக்கப்படுவது நல்ல பாம்பு மட்டும் தான்.
மனிதன் தொடக்கத்தில் காடுகளிலும் மலைக் குகைகளிலுமே திரிந்தான், வாழ்ந்தான் அப்போது அவனை அச்சுறுத்தியதியவை கொடிய விலங்குகள் அவற்றில் பாம்பும் ஒன்றாகும். அவற்றிலும் பாம்பு அவன்; அருகிலிருந்து அடிக்கடி அச்சுறுத்திய ஒன்றாகும். நீரிலும் அது, நிலத்திலும் அது காட்டிலும் அது மேட்டிலும் அது எங்கும் எதிலும் இருந்த பாம்பே மனிதனது ஆதி வழிபாட்டு கடவுளாக உருக் கொண்டிருத்தல் வேண்டும்.
உலகின் பல பாகங்களிலும் கூட்டங்களாக வாழ்ந்த மக்கள் விலங்கு பறவை முதலியவைகளில் யாதோ ஒன்றைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இதனை ஆங்கில மொழியில் “தோதெம்” (Totem) என வழங்குவர். மயூரர், நாகர், லம்புக் கர்ணர், கருடர் முதலிய பெயர்கள் இதற்கு உதாரணமாகும். இக் குலங்களுக்குரிய விலங்குகளும், பறவைகளும் அவ் அவ் மக்கட் கூட்டத்தினரால் புனிதமுடையனவாகக் கருதப்பட்டன.
நாகமானது தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் குலத்தைக் காக்கும் சின்னமாக வழிபடப்பட்டிருக்கலாம். அக்; குலத்தவர் நாகத்திலிருந்து தோன்றியவர்கள் மட்டுமன்றி, நாகமே அவர்களின் நலனைப் பாதுகாக்கின்றது என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். தென்னாசியாவில் குறிப்பாக இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தொல் குடியினரான ஒஸ்ரலோயிட் இன மக்களின் பண்டைய வழிபாட்டு நெறியாக இது விளங்கியது.
ஆதிமக்கள் மொழியை ஓவிய முறையாக எழுதினர். கட்புலனாகும் பருப்பொருளைக் கொண்டு கட்புலனாகாத பொருட்களை வெளிப்படுத்தினர். எடுத்துக்காட்டாக கருடனின் தலையையும், பாம்பின் உடலையும் ஒன்றாகக் கலந்து ஓர் உருவமாக எழுதி அதைக் கடவுளுக்கும் அவரோடு கலந்த இவ்வுலகத்துக்கும் அறிகுறியாக வழங்கிவந்தார்;கள். இவ்வகைக் கருத்தமைப்பு ஓவியங்களிலிருந்தே பண்டைய மக்களின் பழைய தெய்வங்களும், இருடியரும் விலங்குகள் பாம்புகளின் உறுப்புடையவர்களாகச் சித்தரிக்கப்படுகின்;றனர்.
நாகத்தின் மீது கொண்ட பயத்தினாலே அன்றி அதனது வியத்தகு குணங்களாலோ அன்றி அதன் பயன்பாடு காரணமாகவோ அதனை வழிபட்டனர். பாம்பால் நன்மை என்ற அடிப்படையிலும் பாம்பை தெய்வமாக வழிபட்டனர். வயல்களில் பயிர்களை நாசம் செய்யும் எலிகளைப் பாம்பு பிடித்துத்தின்று விடுவதால் பயிர் தப்பும் எனவே பாம்பை உழவனின் தோழன் என்பர். எகிப்தில் கிடைத்துள்ள பழைய சுவடிகள் பாம்பு உழவனின் தோழன் என போற்றுகின்றன. பாம்புப் புற்றுள்ள இடத்தில் கிணறு வெட்டினால் நீர் மேலே நிரம்ப இருக்கும் உழவிற்கும் தொழிலுக்கும் அது பயன்படும்.
பாம்பை வழிபட்டால் நன்மை செய்யும், தீயன விலகும் நல்ல நிகழும் என்ற நம்பிக்கையில் பாம்பு வழிபடப்படுகின்றது. பாம்பை முன்னேர் என நம்பி வழிபடும் மரபு ஏனைய பகுதிகளை விட ஆப்பிரிக்காவில் மிகுந்துள்ளது. இங்கு தம் முன்னோர்களை விழுங்கிய பாம்பினை தன் முன்னோரின் ஆன்மா என எண்ணிவழிபடுவர்.
ஓல்ட்ஹாம் என்ற அறிஞர் இந்திய நாட்டில் படமுள்ள நாகம் பகல் வணக்கத்தோடு தொடர்பு பெற்று வருகின்றது எனவும் அது ஞாயிற்றின்று தோன்றியவர்களெனச் சொல்லிக் கொள்ளும் மக்கட் கூட்டத்தினரின் குல இலச்சினையாகும்.
மழை, கதிரவன், நிலவு ஆகியவை பற்றிய வழிபாடுகள் மனிதன் ஓரளவு பண்பட்ட காலத்திலேயே தொடங்கி இருக்கும். மனிதன் வேளாண்மையில் ஈடுபட்ட காலத்தில் வேளாண்மைக்கு மிகுத்துணை செய்யும் மழை, ஒளி வழிபாடுகள் தோன்றிப் பெருகியிருத்தல் வேண்டும். நாடோடியாகத் திரிந்த மனித இனம் ஒரிடத்தில் தொடங்கிய காலத்தில் தான் முன்னோர் வழிபாடு கால் கொண்டிருக்கும். அப்போது தான் பாம்பு வழிபாடு, முன்னோர் வழிபாட்டுடன் இணைக்கப்ட்டிருத்தல் வேண்டும்.
பேர்கசன் என்ற அறிஞர் இவ்வழிபாடு யூப்பிரற்றிஸ் - ரைக்கிறிஸ் நதிக்கரைகளில் தோன்றி பின்னரே உலகின் பல்வேறு இடங்களிற்கும் பரவியதென்கிறார். நாக வழிபாடு இனக்குழுக்குறி வழிபாட்டின்று தோன்றியது என்றும் இயற்கை வழிபாட்டினின்றும் தோன்றியது என்றும் அச்சத்தால் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன.
உலகில் எத்தனையோ உயிர்கள் உள்ள அவற்றுள் எத்தனையோ மக்களால் வழிபடப்படுகின்றன. ஆனால் அவற்றுள் பாம்பு வழிபாடு மட்டும் முதன்மை பெறுவதற்குப் பல காரணங்களுண்டு. அதற்குரிய காரணங்களாக,
1. விரைவாக செல்லும் தன்மை.
2. உடன் தோன்றுவதும், உடன் மறைவதும்
3. இடுகாடு, சுடுகாடு, பொந்துள்ள மரங்கள், பழைய சுவர்கள், கரையான் புற்று ஆகிய இடங்களில் வழுதல்.
4. மலைப்பாம்பின் பருத்த தோற்றமும் தாக்கும் ஆற்றலும்
5. நச்சுப் பாம்புகள் கடித்தலும் விரைவில் நஞ்சு பரவுதலும்
6. பிளவுண்ட அடிக்கடி வெளியே நீட்டப்படும் நாக்கு
7. பல்வேறு வகை வண்ணங்கள், வண்ணக்கலப்புக்கள்
8. தோரை உரிக்கும் திறம்
9. நூற்றுக்கணக்கான முட்டையிட்டுக் குஞ்சு பெரித்தல்
10. இரட்டைத் தலைப் பாம்புகள் இயல்பாக பிறத்தல் உள்ளன. மூன்று, ஜந்து, ஏழு, ஆயிரம் தலைப் பாம்புகள் என்ற கற்பனைப் பெருக்கத்திற்கு இடம் கொடுத்தது.
11. கடுங்குளிரையும் கடும் வெயிலையும் தாங்கும் ஆற்றல்
12. நிலத்தில் விரைந்து ஓடுவதும் நீரில் விரைந்து நீந்துதலும்
13. பாம்பிற்குள்ள இமையா விழிகளும் தொலைநோக்கும்
14. வியப்பாக பின்னிக் கொள்ளும் திறன்
15. அழகாகப் படம் விரித்து ஆடுதல்
16. பாம்பனைத்தும் இரண்டு ஆண் உறுப்புக்களைப் பெற்றிருத்தல் சில நான்கு ஆண் உறுப்புக்களை பெற்றிருத்தல்
17. விரைவான வளர்ச்சி, நீளம் ஆகியன
18. நஞ்சைப் பாய்ச்சும் திறன்
ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
நாகவழிபாடு ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினரின் வழிபாடாக ஆரம்பமாகிப் பின்னர் பல்வேறு இன மக்களின் வழிபாட்டு நெறிகளுடன் சங்கமாகியது எனலாம். நாகரிகமற்ற கிராமப்புற, பழங்;குடி மக்களின் வழிபாட்டு நெறியாக விளங்;கிய இது காலகதியில் நாகரிகங்களின் வழிபாட்டு நெறிகளினால் மட்டுமின்றி அவற்றுக்குப் பின்னர் நிலைத்து நிற்கும் இந்து, பௌத்த, ஜைன வழிபாடுகளுடன் பேணப்படுவதை அவதானிக்கலாம்.

No comments:
Post a Comment