Pages

Friday, June 16, 2017

அசோகனின் தர்மக் கொள்கைகள்


                   பண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும்
அசோகர்
மன்னாக
 அசோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய இடம்பெற்ற அசோகன் பிற்பாடு தன்சமயம் பரப்பும்நடவடிக்கைகளால்  உலகளாவிய ரீதியில் புகழ் பெற்றான் . கி . மு 273 - 232 வரையான காலப் பகுதியில் மௌரிய சம்ராஜ்யத்தை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மகனான பிந்துசாரனின் புதல்வர் ஆவார்.
பிரியதர்சன என்ற இயற்பெயரைக்கொண்ட இவர் கிரேக்க ஈழ திபெத்திய அறிக்கைகள் மூலமும்  அவருடைய சொந்த கல்வெட்டுக்கள் மூலமும் அறியப்படுகின்றான்.
மக்களுடன் நேராடியாக பேசிய முதல் மன்னர் என்று கூறும் அளவிற்கு கல்வெட்டுக்களிலும் பாறைகளிலும் தூபிகளிலும் களிமண் கிண்ணங்களிலும் கூட இவனது சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலிங்க போரின் பின் மனம்மாற்றம் பெற்று தர்ம அசோகன் என்னும் புகழைப் பெற்றான்.
கலிங்க மண் அசோகனுக்கு வெற்றியை மட்டும் இன்றி உலகு ஓர் ஞானத்தையும் ஆக்கியது. போர் அழிவுகள் மனம்வருந்தி உள்ளம் நொறுங்கி ஆசையே துன்பத்தின் மூலம் என்பதையும் அதாவது அருமருந்தையும் அன்பே உலகை வெல்லும் கருவி என்னும் ஆயுதத்தையும்ம் கைக்கொண்ட சித்தாத்தனின்
அசோகர்
 கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டார் பாடலிபுரத்தில் 3ம் சங்கமகஜனவை கூட்டிதர்மத்தை பரப்பி அறத்தை ஒழுக்கமைத்து சமத்துவத்தை மலரச் செய்து கௌதமரின் சிந்தனையில் உதித்த எண்ணத்தை செயலில் செய்து காட்டி அற ஆட்சியை
 முன்எடுத்தான்.
கலிங்க போருக்கு பின்னர் அசோகர் தம்முடைய கல்வெட்டுக்களில் கொல்லாமையை வலியுறுத்துகிறார்.
பஹாப்ருகல்வெட்டில் தாம் வெளிப்படையாகவே பௌத்த சமயத்தை தழுவியதைக் கூறுகிறார். புத்தம் தருமம் சங்கம் ஆகிய மூன்றையும் தம் வாழ்வின் புகலிடமாகக் கொண்டார். அற ஒழுக்கம் அகத்திலே தென்பட்டால் தான் புறத்தில் அதில் வெற்றி பெறும். என்பதற்கு ஏற்ப அசோகர்  புத்த பிரானின் சிறந்த நல்லுரைகளை பின்பற்றுவதற்கு தொடக்க அடிப்படை வழிகளை மக்களுக்கு புகட்டினார்.
  • ·         ஆன்மிக துறையின் முயற்சியின் பெருமை.
  • ·         தந்தை தாய் சொற்கேட்டல்
  • ·         ஆசிரியருக்கு மதிப்பளித்தாலும் பணிதலும் தொண்டுபுரிதலும்
  • ·         எப்பொழுதும் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டுதலும் கொல்லதிருத்தலும்
  • ·         உண்மை பேசுதல்
  • ·         நண்பர்களுக்கும் பழக்கமனவர்களுக்கும் உறவினர்களுக்கும் அந்தணருக்கும் துறவிகளுக்கும் உதவுதல்
  • ·         அடிமைகளையும் வேளையாட்களையும் ஏழைகளையும் துன்பட்டவர்களையும் நன்முறையில் நடத்துதல்
  • ·         புலனடக்கம்
  • ·         நன்றிமறாவத்தன்மை
  • ·         தர்மத்தில் உறுதியான ஈடுபாடு
  • ·         சொந்த  மதத்தை பின்பற்றுதல்எல்லா மதங்களையும் போற்றுதல்காரணம் இன்றி தன் மதத்தை புகழ்தலும் பிற மதத்தை பழித்தலும் கூடாது
  • ·         சமயப்போறையுடமை
  • ·         சிறிய செலவிடலும் சிறுகச் சேமித்தலும்
  • ·         கொண்டாட்டங்களையும் பயனற்ற சடங்குகளையும்  நீக்கல்
  • ·         தர்மச் சடங்குகளை செய்தல்
  • ·         மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவ ஏற்பாடு செய்தாலும் பயணிகளுக்கு நலன்புரிதலும்
  • ·         பாவத்தை நினைத்து அஞ்சுதல்
  • ·         முரட்டுத்தனம் கொடுமை சினம்  செருக்கு பொறைமை முதலியவை இல்லாது இருத்தல்
  • ·         தர்ம யாத்திரை செய்தல்
  • ·         அரசன் குடிகளை குழந்தைகளாக கருதுதல்
  • ·         அரசனிடம் பணியாற்றும் பொறுப்பு இருத்தல் வேண்டும்
  • ·         தர்மதானம் மேற்கொள்ளல் முதலியவற்றை தம் கல்வெட்டுகளில் கூறுகிறார். http://artsveli.blogspot.com/2011/12/blog-post_7448.html      
    தர்ம சக்கரம் 

                                         அசோகரின் தர்மத்தை பற்றி R.K.முகர்ஜி கூறும் பொழுது ‘’அசோகரின் தர்மம் ஒரு நன்நெறி விதிமுறையேயன்றி சமயநெறிமுறையன்று அது எல்லாச் சமயங்களின் சாரம் ‘’ என்று கூறுகின்றார். 
  ரோமிலாதவர் கூறும் பொழுது அசோகரின் தர்மம் உயர்ந்த குறிக்கோளினையும் நற்பழக்கங்களையும் கொண்ட நடைமுறைக்கேற்ப ஒரு வாழ்க்கைமுறையே என்றும் அதனுடைய சிறப்பான கோட்பாடுகள் கொல்லாமையும் ,குடும்பசமுக நல்லுறவை போற்றுதல் ஆகும் என்று 9,83,12,2  கற்பாறை ஆனை மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.
 உலக வரலாற்றில் தனக்கென ஓர் இடம்பிடித்த மன்னர்கள் வரிசையில் முக்கியம் பெரும் அசோகன் அதன் ஆட்சி சிறப்பால் மட்டும் அல்லாது தர்ம கொள்கைகளாலும் தனக்கான ஒரு இடத்தினை உருவக்கி கொண்டவர்


No comments:

Post a Comment

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...