Pages

Thursday, June 15, 2017

அழிவை நோக்கி பயணிக்கும் தெருமூடிமடம்

பருத்தித்துறை தெருமூடிமடம்

 யாழ்ப்பாணப் பண்பாட்டுப்பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத்தித்துறைக்கென்றும் தனித்துவமான பண்பாட்டுக்குறிகாட்டிகள் உள்ளன.
 அவற்றில் ஒன்று தான் தெருமூடிமடமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள  J/401 ஆம் இலக்க பருத்தித்துறை கிராமஉத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள பசுபதீஸ்வரன்கோவிலுக்கு அருகாமையில் தெருமூடிமடம் அமைவுபெற்றுள்ளது.
(பருத்தித்துறை பட்டினத்தின் பிரதான வீதியிலிருந்து கிழக்குப்புறமாக தும்பளைவீதியில்அமைந்துள்ளது தெருமூடிமடமானது யாழ்ப்பாணத்தில் இருந்து 32 km தூரத்தில் அமைவு பெற்றிருப்பதோடு வாகனப்பயணம் மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து இம்மடத்தை அடைய  46 நிமிடங்கள் செலவாகும்கா.சிவத்தம்பி தெருமூடிமடம் என்பது குறிப்பாக வடமாராட்சி பகுதிக்கே உரித்தானதாகவிளங்கியது எனச் சொல்கிறார்.  பருத்தித்துறை நகரத்திற்கு அண்மித்தவகையில் ஐந்து தெருமூடிமடங்கள் ஏற்கனவே காணப்பட்டதாகவும் பருத்தித்துறை தும்பளைவீதியில் (மருதங்கேணிசெல்லும்நெடுஞ்சாலைமுகப்பில் காணப்படும் தெருமூடிமடத்தித்தைத் தவிர ஏனைய நான்கும் அழிவடைந்து விட்டனமுன்னைய காலங்களில் வாகனவசதிகள் குறைவாக இருந்தது . இதனால் மக்கள் எங்கும் எதனைப் பெறுவதாக இருந்தாலும் நடைப்பயணம் மூலமாகவே அவற்றினை பெற்றுக்கொண்டனர்பருத்தித்துறையிலிருந்து செல்வோரும் ஏனைய இடங்களிலிருந்துவருவோரும் இவ்விடத்திலிருந்து இளைப்பாறி ,உட்காந்து விட்டு அயல் உளர்களுக்கும்செல்வார்கள்நூறு வருடங்களுக்கு முன்நோக்கிபார்த்தால் பருத்தித்துறையில் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் ஓர்துறைமுகமாகவும் விளங்கியிருந்தது இதனால் பல்வேறுபட்ட மக்களும் இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் இங்கு  வருகைதந்தனர்.
இந்நிலைமையும்கால்நடைப்பயணங்கள்,  வண்டிப்பாரங்கள் கிராமப்பயணங்கள்,  சிற்றூண்டிவிடுதி,   திருடர்தொல்லை,குறித்த நேரபிரயாணத்தடங்கல்,பேய் பிசாசு மூடக்கொள்ளைகள்  திர்த்த யாத்திரைகள் என்பவற்றின் தேவையை உணர்ந்த மக்கள் பருத்தித்துறை தெருமூடிமடத்தை உருப்பெறச் செய்தார்கள்திருமதி குமுதா உமாகாந்தன் எழுதியயாழ்ப்பாணத்துப்பண்பாட்டில்மடமும்”  என்ற நூலில்   1898  ஆம்ஆண்டில்  வல்வெட்டுத்துறை சண்முகக் குருக்கள் என்பவர் இந்த தெருமூடிமடத்தைக் கட்டுவித்ததாக இந்நூல் குறிப்பிட்டுள்ளார்இதனை இம்மடமானது அந்தணர் ஒருவரினாலே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் இம்மடத்தின் பக்கத்து வளவில் அமைந்திருந்த அந்தணிரின் வீட்டுக்குச் செல்லக்கூடியவாயில் ஒன்று மடத்தின் ஒருபக்கத்தில் காணப்படுகிறதுஅந்த வீட்டுக்கும் மடத்திற்கும்தொடர்பிருப்பதனை ஊகிக்கமுடிகின்றது

     இம்மடத்தினுடைய கலையமைப்பினைப் பற்றி நோக்குகின்ற பொழுது இது இடதுவலது அகிய இருபக்கமும் தரையிலிருந்து 2அடி உயர்த்தப்பட்டு நீளம் வரை திண்ணை யாக்கப்பட்டு   20 அடி உயர்வாகக் கூரையமைக்கப்பட்டு இருமருங்கையும் மூடி வெயில் படாதவகையில் கட்டப்பட்டுள்ளது . அதன் தொன்மையான வடிவத்தினைக் கண்டுகொள்ளமுடியாமலுள்ளதுஇந்தமடம் கட்டபட்ட பொது கூரைக்கு கொழுக்கிஓடு அல்லது பீலிஓடு என்னும் உளர்ஓடு என்று சொல்லப்படும் ஓடுகளேபயன்படுத்தபட்டிருந்தன . காலப்போக்கில் அவைசோதமடைய  1970 களில் பின்னர் சம காலத்தில் பாவனையில் உள்ள சாதாரண ஓடுகள் பயன்படுத்தப்பட்டன தற்போதுள்ள கல்லால் அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியானது  150 வருட காலப் பழமைமிக்கதுதிரவிடக்கலைப் பாணியில் அமைந்துள்ள அதன் அடித்தளம் துண்கள் மற்றும் சுவர்ப்பாகங்கள் கட்டிடக்கலை ரீதியாக விரிவாக  ஆராயத்தக்கதாகும்வெண்வைரச் சுண்ணக்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள் அதன் கபோதங்கள் மற்றும் தனம் ஆகியன சிறந்த கொத்து வேலைபடுகளைக் கொண்டுள்ளன . பொழிந்த வெண்வைரக்கற்சதுரங்கள் பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள உயர்ந்த திண்ணை போன்ற தளத்திற்கு மிகவும் செம்மையான முறையில் பரவப்பட்டு அடுக்கிஒழுங்கமைக்கப்பட்ட முறைமை நீண்டகாலப் பாவனையை வெளிப்படுத்துகின்றது . இருபக்க திண்ணைகளிலும் கல்பரவப்பட்டதளத்திலிருந்து நான்கு பக்கச்சதுரப்பட்டை   அமைப்புடன் ஆரம்பிக்கும்  கற்தூண்கள் அவற்றின் கூரையைத்தாங்கும் பகுதியில்தூண் கபோத்த்துடன் காணப்படுகின்றது.  இரு பக்கங்களிலும்   எல்லாமாக 16 தூண்கள் காணப்படுகின்றனஅவற்றுள் ஆறு தூண்களில் தமிழ்வரிவடிவில் சாசனங்கள் பொறிக்கப்படுக்காணப்படுகின்றன.  19 ஆம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவவளர்ச்சியை அச்சாசனங்களில் காணமுடிகின்றதுஇம் மடத்தினுடைய துண்களின் அமைப்பு  தனித்துவமானது
பழைய நிலையும் தற்போதைய நிலையும்
ஒன்றைக்காற்துண்களாக காணப்படும்   இவை   நடுவில்   எண்பக்கப்பட்டையுடனான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள துணில் கபோதம் உட்பட முழுத்தோற்றமுமே பல்லவர்கலைமரபினைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது . இத் தெரு மூடிமடத்தினது இருபுறங்களிலும் உயர்ந்தமேடைபோல் காணப்படும் இருபக்கத் திண்ணைகளினதும் வெளிப்புறச் சுவர்கள் சுண்ணாம்பு சாந்தினால் கட்டப்பட்டவையாக உள்ளன . இத்தெரு மூடிமடத்தினது மேற்கூரையானது தூண்களின் கபோத்ததிலிருந்து இருபக்கங்களிலும் சமாந்தரமாகமே எழுப்பட்டுள்ள ஓர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்டவிட்டத்துடன் கூடிய ஒரு சட்டக்கோப்பினால் தாங்கப்பட்டுள்ளது. .இத்தெரு மூடிமடத்தின் இருபக்க மண்டபங்களினது மேற்கூரை தட்டையானதாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மடத்தின் ஓட்டுமொத்தாத்தில் கட்டிடக்கலைரீதியாக யாழ்ப்பாணத்திற்கேயுரிய திருப்பணிக்கல் கட்டிடக்கலை மரபும் கிறிஸ்தவ கட்டிடகலைமரபும் ஒன்றிணைந்த வகையில் மீள் உருவாக்கம் பெற்றதாக காணப்படுகின்றது. பல்வேறுபட்டோருக்கு பல பாதுகப்புக்களையும் மன ஆறுதலையும் வழங்குகின்ற மடமாகவே இத்தெரு மூடிமடம் காணப்படுகின்றது. அந்த காலத்தில் தெருவில் நடைவாரியாகவும் மாட்டுவண்டிகளிலும் பயணம்செய்வோர் இளைபாறிச் செல்ல இந்தமடம் உதவியாக இருந்தது.பண்பாடு ரீதியாக சிறந்து நிற்கும் இம்மடமானது இன்று இலங்கையில் எஞ்சியுள்ள ஒரேயொரு தெருமூடிமடம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. இன்றும் கூடப்பார்த்தால் 60,70 வயது நிரம்பிய பெரியோர்கள் இளைப்பாறுவதற்கும் கூடிக்கதைப்பதிற்கும் ஒருநாளைக்கு ஒரு தடவை யென்றாலும் சிறிதுநேரம் இதில் இருக்காமல் செல்லமாட்டார்கள் . தமிழர் பண்பாட்டின் நிலைகவலனாக இவ்தெரு மூடிமடம் அமைகிறது. கலைரீதியாகவும் முக்கியத்தும்மிக்க ஒர் கட்டிடமாகவும் காணப்படுகிறது. திராவிடகலைப்பாணியின் வெளியீடாக இது அமைந்துள்ளமை சிறப்பாகும் அழகியல் சார்பானது , வரலாற்றுப் பெருமதியும் கொண்ட மரபுரினமச்சின்னமாக விளங்கின்றது.  பருத்தித்துறையில் உள்ள  தெருமூடியமடங்களில் எஞ்சியுள்ள ஒரே ஒரு மடம் இதுவாகும். இத்தெருமூடிமடத்தோடு இணைந்திருந்த சுமைத்தாங்கிக்கல் ஆவராஞ்சிக்கல், துலாக்கிணறு மற்றும் நீர்த்தொட்டி ஆகியன முற்றாகச் செயல் இழந்து இருக்கின்றன ஆயினும் இம்மடமானது இன்று அழிவடைகின்ற நிலையினையே எட்டியுள்ளது . கட்டிடங்களில் ஏற்படுகின்ற தேய்மானங்கள் வெடிப்புக்கள் சூழல் காலநிலை போன்றவற்றின் தாக்கங்கள் தாவரங்களின் வளர்ச்சி ,பாசி , பறவைகள் எச்சங்கள் இயற்கை விளைவுகள் மனிதநடவடிக்கைகள் சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்றகாரணிகளால் தேய்மானத்திற்கு உள்ளாகி வருகின்றது. மடத்தில் ஏற்படுகின்ற சிறுசிறு வெடிப்புக்களையும் திருத்தம் செய்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் தேயமானங்களை திருத்தியமத்தால் இலங்கையில் உள்ள ஒரே ஒருதெரு மூடிமடத்தினை நீண்ட ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கச் செய்யமுடியும்





.



பருத்தித்துறை தெருமூடி மடத்தில் சிதைவடைந்த பகுதிகள்
வெடிப்புக்கள்,பிளவுகள்ஏற்படுகின்றன.

மரங்கள் வளர்ச்சியடைதல் {கட்டிடத்தின்உட்பகுதிகளில்}

மரங்கள் வளர்ச்சியடைதல் {கட்டிடத்தின்உட்பகுதிகளில்}

மனிதநடவடிக்கைகளால்சிதைவடைதல்

மரங்கள் வளர்ச்சியடைதல் {கட்டிடத்தின்உட்பகுதிகளில்}

வெடிப்புக்கள்,பிளவுகள்ஏற்படுகின்றன.


வெடிப்புக்கள்,பிளவுகள்ஏற்படுகின்றன.
பருத்தித்துறை
   

No comments:

Post a Comment

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...